ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Published by
பால முருகன்

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதியை குறிப்பிடக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரை மாநகரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தகூடாது, என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி பெயரை தவிர்க்கவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் குறிப்பிடப்பட்டு காளைகள் அவிழ்த்து விட படுகிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர்!

இப்படியெல்லாம்  செய்யக்கூடாது என கடந்த 2019-ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் முறையாக பலரும் பின்பற்றவில்லை. எனவே, இந்த ஆண்டு இதனை சரியாக பின்பற்றவேண்டும் என்று மதுரை உயர்நிதிமன்ற கிளையில் மனுகொடுத்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் உத்தரவுகளை முறையாக பின்பற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் சொல்லி அவிழ்க்க கூடாது என்ற  உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

2 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

3 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

4 hours ago