மதுரையில் முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரைக்கு சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். எனவே இந்த இளைஞர் மதுரையில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு இடையில் முகாமில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்த்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.காவல்த்துறையின் விசாரணையில் அந்த இளைஞர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இளைஞர் காதலி வீட்டில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞரை காவல்த்துறையினர் கைது செய்தனர். இதன் பின் விசாரணையில் அந்த இளைஞர் , வெளிநாட்டிலிருந்து வந்த தன்னை காண காதலி காண்பதற்கு இருந்ததாக கூறினார் . மேலும் அந்த இளைஞரின் காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…