ரிசர்வ் வங்கியில் மாநில அரசு கடன் வாங்கி கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் சொல்லுவது தவறானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அருகே ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜி.எஸ்.டி நிலுவை தொகை கேட்டு மத்திய அரசுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழக அரசு கேட்டுள்ள 12 ஆயிரம் கோடி நிலுவை தொகை என்பது சட்டப்படி மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை என்றும் இதனை கொடுக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் கூறுவது முற்றிலும் சட்டத்திற்கு புறபானது என்று குற்றசாட்டியுள்ளார்.
கடந்த வாரம் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. மாநிலங்களுக்கு கடன் வழங்க, ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார். இதற்கு, அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் கூறியதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…