ஊழியருக்கு கொரோனா.! மூடப்பட்ட மகேந்திரகிரி இஸ்ரோ மையம்.!

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், விஞ்ஞானிகளும், ஒப்பந்த ஊழியர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அவர் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக இஸ்ரோ மையம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025