அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணப்பெட்டியுடன் தொகுதிக்குள் வந்துள்ளார் என்று திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தொகுதி எம்எல்ஏவும், திமுக வேட்பாளரான தங்கபாண்டியன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணப்பெட்டியுடன் தொகுதிக்குள் வந்திருப்பதாகவும், பணத்தை பெற்று கொண்டு வெறும் பெட்டியுடன் அமைச்சரை திருப்பி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகாசிக்கு ஒரு கால் செய்துவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் யார் ஒருவர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லிட்டா, நான் அரசியலை விட்டு கூட போக கூட தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் போவாரா? என்று மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்காளர்கள் அனைவரும் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அந்த வாக்குகளை கொண்டு சேர்கின்ற பணி நம்முடைய பணி என கூறியிருந்தார்.
உங்களுக்கு எதை செய்யவேண்டுமோ, அதை செய்கின்ற வேலையை நான் இங்குள்ள நிர்வாகிகளை அழைத்து பேசி, அதற்கான ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதிமுக தொண்டர்களுக்கு இன்று தொடங்கி வரும் 4ம் தேதி வரை சில முக்கிய பணிகள் உள்ளன என்றும் அவற்றை சிறப்பாக செய்யவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…