Makeup Room Vehicle: சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக நடமாடும் ஒப்பனை அறை வாகனம் அறிமுகம்.!

Published by
செந்தில்குமார்

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக நடமாடும் ஒப்பனை அறை வாகனம் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ் ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதோடு, நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பனை அறை வாகனத்தில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், உடை மாற்றும் அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த வாகனங்களின் செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் நா.கார்த்திகேயன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர், கூடுதல்/இணை/துணை ஆணையாளர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

3 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

4 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

4 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

5 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

6 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

7 hours ago