பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் வழங்கிய மராசோ கார் டெலிவரி.!

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வழங்கிய மராசோ கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
கோவையைச்சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா, சமீபத்தில் தான் பணிபுரிந்துவந்த தனியார் பேருந்து நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு காரின் சாவி வழங்கப்பட்டது. இன்று அந்த காரின் டெலிவரி போல் தெரிகிறது.
தற்போது, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வழங்கிய காருடன் ஷர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக கோவை தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா, கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் திமுக எம்.பி கனிமொழி பயணித்த தினத்தன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணசீட்டு கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.