சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் , ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ்க்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை அன்றைய தினம் ஒத்திவைத்து நீதிமன்றம்.
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…