டெல்லியில் நாளை பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
டெல்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறேன். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் , நிதின் கட்கரி , நிர்மலா சீதாராமன் அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.
அமீரக பயணம் வெற்றிகரமாக அமைந்த நிலையில் அடுத்த பயணம் இந்திய தலைநகராம் டெல்லியை நோக்கி அமைகிறது.
மாநில உரிமைக்களுக்காக பிரதமருடன் சந்திப்பு:
திட்டங்களுக்குக்கான நிதி, மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில உரிமைக்களுக்காக பிரதமருடன் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப்பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது.
ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…