அமைச்சர் ஏ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4-வது நாளாக சோதனை..!

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என திருவண்ணாமலை, சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் போன்ற பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 4-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரிஏய்ப்பு செய்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இன்றைய (06.11.2023) பெட்ரோல், டீசல் விலை..!
அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை அருணை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இரும்பு கம்பி வியாபாரி ஜமாலுதீனின் கடை, வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. மேலும் பிரபல கட்டுமான நிறுவனங்களான அப்பாசாமி, காசா கிராண்ட் நிறுவனங்களிலும் நான்காவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025