மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதற்கிடையில்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவலும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில்,தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இக்கூட்டத்தில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி,மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது:
“மதுரை மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.என்ன விதமான கட்டுப்பாடுகள் என்பதை கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து முடிவு செய்வோம். அதன்படி, சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…