ரூ500 கோடிக்கு அளவில் சொத்து சேர்த்த அமைச்சர் துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கட்சி சேர்ந்தவர்களே தலைமைக்கு வெளியிட்ட நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ரெங்கசாமி அமமுகவுக்கு சென்று விட்டதால் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்து வருகின்ற துரைக்கண்ணு வடக்கு மாவட்ட செயலாளராக அக்கழகத்தால் நியமிக்கப்பட்டார்.
வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இங்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக தனது வாக்கு வங்கிகளை இழந்து அதிமுக படுத் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் நேற்றுமுன் தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் எம்பி வைத்திலிங்கம் என பலர் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது அந்த சமயத்தில் அமைச்சரின் எதிர்ப்பாளர்கள் விநியோகித்து வந்த பிட் நோட்டீசை அமைச்சர் பார்க்கும்படி ஒரு புறம் படித்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வாசித்த அந்த நோட்டீசில் அதிமுக தலைமையே திரும்பிபார். உள்ளாட்சித்தேர்தலில் தோல்விக்கு காரணம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரின் செயல்பாடு இல்லாததுதான். ஜாதிக்காரனாக பார்ப்பது, ரூ500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது. இவைகள்தான் காரணம். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா? தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வேளாண்மை அமைச்சர் மீது நடவடிக்கை எடு. இவண் இதர ஜாதி’ என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மேலும் 2 பண்டல்கள் நிறைய நோட்டீசிகளை விநோயோகிக்க வைத்திருந்ததாகவும் அதனை அமைச்சரின் ஆதரவாளர்கள் கைப்பற்றி அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கிருந்து அமைச்சர் உடனடியாக சென்று விட்டதாக கூறப்படுகிறது.மேலும் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணுவுக்கு எதிராக அதிமுகவினரே நோட்டீஸ் வினியோகித்தது அதிமுகவில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…