Minister Udhayanidhi stalin - Tirunelveli flood relief [File Image]
தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த வீடுகளுக்கு நிதியுதவி , கால்நடை உயிரிழப்புகளுக்கு நிவாரணம் என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.
வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
அதற்கான கணக்கெடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக நிவாரண பணிகள் தொடங்கப்பட்டுள்ளன . அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் உள்ளனர். அப்போது கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு நிவாரண உதவிகள், கால்நடை நிவரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தற்போது நெல்லை மாவட்டத்தில் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முதற்கட்டமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுக்கப்படும். நிவாரண பணிகள் விவகாரத்தில் பிற கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இது நூறு வருடத்தில் இதுவரை பெய்யாத கனமழை அளவாகும். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவது குறித்து செய்தியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் தமிழகம் வரட்டும். வந்து பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிடட்டும் பின்னர் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக தொலைபேசியில் பேசினார். அப்போது தமிழக முதல்வர் பிரதமரிடம் தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள விரைவாக பேரிடர் நிவாரண நிதி உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…