Tamilnadu CM MK Stalin [File Image]
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மகளிருக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. கட்டணமில்லா பயண சலுகை மூலம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரிய வருகிறது. விடியல் பயண திட்டம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு கிடைக்கிறது.
பெண்களுக்கு பொருளாதாரம் சுதந்திரம் கிடைத்துள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன் மிகுந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தை மேலும் செழுமைப்படுத்தி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செலவினத்தின் அடிப்படையில் இல்லாமல் கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் திட்டங்களை அளவிட வேண்டும். அனைவருக்கும் சுகாதாரம் என்பதை மக்களை தேடி மருத்துவம் திட்டம் உறுதி செய்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…