ம.நீ.ம தான் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்… நாங்கள் போகவில்லை – எஸ்டிபிஐ

Published by
பாலா கலியமூர்த்தி

அமமுக கூட்டணி அதிக வெற்றி பெறும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவரான தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவரான தெஹ்லான் பாகவி, கருத்துக்கணிப்புகளை தாண்டி இந்த தேர்தலில் அமமுக கூட்டணி அதிக வெற்றி பெறும் என்றும் சிறுபான்மையினர் ஒரே கட்சியை பின்தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை இருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை, அவர்கள்தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தனர். பின்னர் வரும் தேர்தலில்  அமமுக தான் உகந்த கூட்டணி என்று முடிவெடுத்து சந்திக்கிறோம். இந்த தேர்தலில் அமமுகவுக்கு பெரிய ஆதரவு இருப்பதை களத்தில் பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு ஒவைசி வராவேண்டாம் என கூறினேன். தேர்தலில் ஒவைசியின் கட்சி போட்டியிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாமியர்கள் ஒரே கட்சியின் பின்னல் நிற்கக்கூடாது. இஸ்லாமியர்கள் அனைத்து தளங்களிலும் பிரிந்து நிற்பது நல்லது தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக வெற்றிபெற கூடாது என்று எஸ்டிபிஐ உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

23 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

55 minutes ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

1 hour ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

2 hours ago