சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட பணிகள், கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரையிலான போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் எவ்வித போக்குவரத்து மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம், வடபழனி நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று அம்பேத்கர் சாலை வழியாக 100 அடிசாலை வழியாக செல்லலாம்.
வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, வழியாக செல்லலாம்.
ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிற்கு ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுவதால் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…