தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது சிபிசிஐடி.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஜிபி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டிருந்தார்.
தலைமறைவாக இருந்த வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கொலை தொடர்பாக திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…