தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று தந்தை -மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேதப்பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…