கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த இசைக்கலைஞர்கள் பேஸ்புக் நேரலையில் மூலம் கச்சேரி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாதாரணமாகவே கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் இன்னிசைக் கச்சேரிகளில் பாடும் இசை கலைஞர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் எப்படி மற்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் வேலைகள் கொரோனாவால் முடக்கப்பட்டதோ, அதைக் காட்டிலும் அதிகமாக இசை கலைஞர்களுக்கு சுத்தமாக வருவாய் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் இசை கலைஞர்களுக்கு இசையால் இணைவோம் என்கிற தாரக மந்திரத்தோடு திருச்சி குருப்பிரியா என்கிற இசைக்குழுவினர் சேர்ந்து முகநூலில் நேரலையில் வாரத்திற்கு ஒரு நாள் இசை கச்சேரி நடத்தி, நிதி திரட்டி அரிசி உள்ளிட்ட பொருட்களையும் திரட்டி வாய்ப்பும் வருவாயும் சுத்தமாக இல்லாமல் தவித்து வரும் இசை கலைஞர்களுக்கு உதவி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் இந்த பணியின் மூலம் நலிவுற்ற கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குருப்பிரியா சுந்தரேசன்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…