மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கால்வாயில் ரத்த கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது.அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையை மீட்டு திறந்து பார்த்துள்ளனர்.அப்போது அதில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
அந்த நபரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பின்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
அவர் அங்குள்ள பசுமலை அரசுப் பேருந்து பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அவர்கள் நடத்திய விசாரணையில் நேற்று இரவு மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெரியண்ணன் மீது மர்ம நபர்கள் கல்லைப் போட்டுக் கொலை செய்து பின்னர் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தேடிவருகின்றன.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…