தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் இருக்கிறார். இவர், இன்று காலை உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, கர்ணனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.
அலுவலகத்திற்குள் புகுந்து உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி. திஷா மிட்டல் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அமைச்சரின் உதவியாளர் கர்ணன் கடத்தப்பட்டது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. அதில், 4 இளைஞர்கள் அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து கர்ணனை காரில் கடத்தி செல்கின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…