தைலமரக்காட்டில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் 13 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி அங்குள்ள குளத்தங்கரையில் கழுத்து அறுக்கப்பட்டு விழுந்து கிடந்தார். அங்கு தண்ணீர் எடுக்க சென்றபோது தலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுமி 19 ஆம் தேதி இரவு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பின்னர் சிறுமியின் தந்தை தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து. தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லை செய்யப்பட்டதாக தந்தையே வந்து நாடகமாடிய நடிப்பில் இருந்தபோது போலீசார் முதலில் விசாரணையை தொடங்கினார்கள். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. அதன்பின்பு தான் விசாரணையின் கோணத்தை புதுக்கோட்டை போலீசார் மாற்றினார்கள். இதன்பிறகு தொடர்ந்து 6 தனிப்படை அமைப்பு விசாரணை மேற்கொண்டார்கள்.
கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் தந்தையின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தந்தையை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தந்தை பன்னீர்செல்வமும், உறவினர் குமார் என்பவரும் சேர்ந்து மூடநம்பிக்கையின் அடிப்படையில் மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மந்திரவாதியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…