நீட் தேர்வு கடினமான தேர்வு தான். அதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது.
நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இந்த தேர்வானது 13 மொழிகளில் 198 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் மட்டும் இந்த நீட் தேர்வை 1,10,921 எழுதுகின்றனர். இதில் 40,376 மாணவர்களும், 70,594 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் எழுதுகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு கடினமான தேர்வு தான். அதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது.
குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்றும், நாளை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துள்ள நிலையில், அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…