Udhayanidhi
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி இந்த இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி அவர்கள், தனது எக்ஸ் தள பக்கத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது.
இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி – மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம். நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம்.’ என தெரிவித்து இருந்தார்.
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…