கடந்த ஆண்டு இறந்த எஸ்.ஐக்கு நெகடிவ் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி கொடுத்தனர்.
தென்காசி மாவட்டம் வி.கே புதூர் தாலுகா சுரண்டையில் வசித்து வந்த எஸ்.ஐ அந்தோணிராஜ் மாரடைப்பால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தோணிராஜிக்கு வினோத் என்ற மகன் உள்ளார். வினோத் தனது மனைவி ஜென்சியுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி வினோத் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஜென்சிக்கு கொரோனா மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுஇருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தென்காசி கட்டுப்பாட்டு அறையில் இருந்து வினோத்தின் போனிற்கு தொடர்பு கொண்டு உங்கள் தந்தை அந்தோணிராஜ்க்கு கொரோனா நெகட்டிவ் எனவும் உங்கள் மனைவிக்கு பாசிட்டிவ் வந்துள்ளது என தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வினோத் எனது தந்தை இறந்து எட்டு மாதத்திற்கும் மேலாக ஆகிறது எனவும் கடந்த ஆறு மாதங்களாக சென்னையிலிருந்து எனது மனைவி ஊருக்கு திரும்பவில்லை என அவர் தெரிவித்தார். மேலும் நாங்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார். சுகாதாரத்துறையின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…