ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!
ரிஷப் பண்ட் ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் என சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வரும் அவருக்கு என்ன தான் ஆச்சு என்பது போல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
நேற்று நடைபெற்ற அந்த போட்டி லக்னோ அணிக்கு அவ்வளவு முக்கியமான போட்டியும் கூட. அந்த போட்டியிலும் வழக்கம் போல திணறி கொண்டு விளையாடிய வந்த ரிஷப் பண்ட் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மொத்தமாக இந்த சீசன் 12 போட்டிகள் விளையாடி இருக்கும் அவர் 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, அவருடைய பேட்டிங் பற்றிய விமர்சனங்களும் ஒரு பக்கம் பேசுபொருளாக வெடித்துள்ளது.
இந்த சூழலில், சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, ரிஷப் பண்டின் பேட்டிங் பாணியைப் மாற்றக்கூடாது என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ரிஷப் பண்ட் ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். அவர் அதிரடியாக ஆடுவதற்கு பெயர் பெற்றவர், குறிப்பாக ஆபத்தான ஷாட்கள் விளையாடுவதில் தான் வல்லவர்.
ரிஷப் பந்தின் ஆக்ரோஷமான பேட்டிங் பாணியே அவரை தனித்துவமான வீரராக ஆக்குகிறது. இதை மாற்றினால், அவர் ஒரு “சாதாரண” வீரராக மாறிவிடுவார், அவர் சாதாரணமாக விளையாடினாள் இந்தியாவில் அவரை போல பல வீரர்கள் இருந்துவிடுவார்கள். எனவே, அவர் தன்னுடைய அதிரடி பேட்டிங்கை மாற்றக்கூடாது. என்னைப்பொறுத்தவரை அவர் இயல்பான, ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடர வேண்டும். அப்படி விளையாடினாள் தான் அவர் மீதுள்ள விமர்சனங்கள் மறையும்” எனவும் ஜடேஜா கூறியுள்ளார்.