முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!
திக்வேஷ் சிங் ரதி தனது வழக்கமான நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அபிஷேக் ஷர்மாவை கோபமடைய செய்துள்ளது.

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது மட்டுமின்றி, லக்னோவின் பிளே ஆஃப் எண்ணத்தை கனவாக மாற்றியது என்று சொல்லலாம். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது ஒரு தலைப்பு செய்தியாக மாறியது என்றால் மற்றோன்று அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த மோதல் ஒன்றும் தலைப்பு செய்தியாக வெடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய எஸ்ஆர்எச் அணியில், அதர்வா டைடே 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அப்போது அவருடைய ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி பந்துவீச வந்தார். அவர் தனது கூக்லி பந்தில் அபிஷேக் ஷர்மாவை ஆட்டமிழக்கச் செய்த நிலையில், ரதி தனது பிரபலமான “நோட்புக்” கொண்டாட்டத்தை செய்து, “போ, போ” என்பது போல் சைகை காட்டினார். இது அபிஷேக் ஷர்மாவை கோபப்படுத்தியது.
முதலில் சைலண்டாக இருந்த அபிஷேக் ஷர்மா ஒரு கட்டத்தில் ரதியை நோக்கி “வெளியே போ” என்பது போல் விரலை காட்டி பதிலளித்தார். இதற்கு ரதியும் அதே சைகையை திருப்பி செய்ய, அபிஷேக் “முடியை கட் செய்துவிடுவேன்” என்பது போல் சைகை செய்தார். நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர்.
போட்டி முடிந்த பிறகு, இருவரும் கைகுலுக்கினாலும், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எல்எஸ்ஜி உதவி பயிற்சியாளர் விஜய் தஹியா மற்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர். அபிஷேக் ஷர்மா, ஆட்டத்திற்குப் பிறகு, “நான் ரதியுடன் பேசினேன், இப்போது எல்லாம் சரியாகிவிட்டது” என்று கூறினார். இருப்பினும் இவர்கள் மைதானத்திற்குள் பேசிய காரசார விவகாரம் குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
WHAT A NIGHT ABHISHEK SHARMA AND AND DIGVESH RATHI #LSGvSRH pic.twitter.com/AgZViEHzWp
— The Ajay Cric (@TheCric_AJAY) May 20, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025