நெல்லையில் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி பச்சை, ஊதா, சிகப்பு ஆகிய மூன்று நிறங்களில் பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில் பச்சை நிற அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், ஊதா நிற அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சிகப்பு நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி சீட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்லும் என்றும் ஆனால் மருத்துவ அவசரத்திற்கு விதிவிளக்கு என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் 15 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே வெளியே அவர் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் 911 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருநெல்வேலியில் இதுவரை 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…