அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!
ஜூன் 2இல் வெயில் நிலவரம் பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. இந்த கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இன்று திருச்சியில் நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “கடுமையான வெப்பம் நிலவுகிறது. தற்போது திருச்சியில் 104 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு என கூறியுள்ளோம். அப்போது நிலவும் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்து முதலமைச்சர் அலுவலகத்தில் கலந்தாலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்.
தேசிய கல்வி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தேசிய கல்வி கொள்கை வெறுமனே மொழி சார்ந்த பிரச்சனை அல்ல. அது குழந்தைகளின் இடைநிற்றலை அதிகரிக்கும். 3, 5, 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அழுத்தத்தை தரும். மும்மொழி கொள்கை ஒரு தோல்வியடைந்த மாடல்.” என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.