அவசர பயணத்துக்கு புதிய எண் அறிவிப்பு – தமிழக அரசு

Default Image

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100க்கு தொடர்பு கொண்டோ அல்லது எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அவசர பயணத்துக்காக அனுமதி சீட்டு பெற கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்