கொரோனா தடுப்பு பணி ! ரூ.52 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக சின்ன தல ரெய்னா அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.மேலும் உத்தரபிரதேச முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.மொத்தமாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.52 லட்சம் வழங்குகிறார் ரெய்னா.
It’s time we all do our bit to help defeat #COVID19. I’m pledging ₹52 lakh for the fight against #Corona (₹31 lakh to the PM-CARES Fund & ₹21 lakh to the UP CM’s Disaster Relief Fund). Please do your bit too. Jai Hind!#StayHomeIndia @narendramodi @PMOIndia @myogiadityanath
— Suresh Raina???????? (@ImRaina) March 28, 2020