தமிழகம் முழுவதும் மொத்தம் 49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பசியாறி பயன் அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. எனினும் சத்துணவின் பயன் முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.
எனவே, பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளனர். முதலில் சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்து விட்டு பின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் என்றும், புதிதாக மதிய உணவு சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும். யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் அனைத்து மாவட்டத்திலும் நிறைவேறினால் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என பொதுமக்கள் கருதுகின்றனர். இதே போல் மதிய உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக மாணவர்கள் தரப்பிலும் அவர்கள் பெற்றோர் தரப்பிலும் குற்றச்சாட்டு உள்ல நிலையில் அரசு கொடுக்கும் நிதியை சத்துணவு பொறுப்பாளர்கள் சரியாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை சமூக நலத்துறை உறுதிசெய்து கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…