NIA Raid : கோவை, சென்னையில் 30 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை.! அதிகாலை முதல் தேடுதல் தொடரும் வேட்டை…

கடந்த வருடம் அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு விசாரணைகள் தொடர்ந்து.
இந்த வழக்கானது தீவிரவாத செயல்பாடுகளை நாட்டுக்குள் கண்காணிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் விசாரணை மேற்கொண்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது .
விசாரணைக்கு உட்படுத்தபட்டரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் பெயரில் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சுமார் 30 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவையில் 20க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னையிலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக 30 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்ற கோணத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையானது இன்று காலை 6 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.