தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை கொரோனாவை விட தற்போது இரண்டாவது அலை கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், கட்டுப்பாடுகள் அதிகரிப்பது தொடர்பாகவும் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து, பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
ஏற்கனவே ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…