Punishment detail for Nirmala Devi [file image]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர்.
இதன்பின் அந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இது வழக்கு சுமார் ஆறு ஆண்டுகளாக விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
மேலும், உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் இன்று வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் நிர்மலா தேவிக்கான தண்டனையை அறிவித்தார். மேலும் ஏற்கனவே சிறையில் இருந்த காலங்களை தவிர்த்து மீதி நாட்கள் சிறையில் இருப்பார் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…