5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆட்டமிழந்து இருவரும் வெளியேறினர்.

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. மதிய உணவு வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக, மதிய உணவு முன்னதாகவே நிறுத்தப்பட்டது. சாய் சுதர்ஷன் 25 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மான் கில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியாவுக்கு முதல் அடியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பினார். 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த பிறகு அட்கின்சனின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து, 16வது ஓவரின் முதல் பந்திலேயே கே.எல். ராகுல் வீசிய பந்து இந்தியாவுக்கு இரண்டாவது அடியாக அமைந்தது.
கேஎல் ராகுலும் அணி ஸ்கோர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸின் பந்து அவரது பேட்டின் உள் விளிம்பைத் தொட்டு ஸ்டம்பைத் தாக்கியது. ராகுல் 40 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதன்படி, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இருவரும் ஆட்டமிழந்தனர். தற்போது, கேப்டன் ஷுப்மான் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்.