5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜூலை 31) அன்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
தற்பொழுது, இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். டாஸில், ஷுப்மான் கில் தொடர்ச்சியாக ஐந்தாவது டாஸை இழந்துள்ளார். இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது, இதனிடையே இந்திய விளையாடும் பிளேயிங் லெவனில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் இடத்தில் ஆகாஷ்தீப், துருவ் ஜூரெல், ஆகாஷ்தீப் மற்றும் கருண் நாயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து ஏற்கனவே தனது விளையாடும் பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
இப்பொது, இந்திய இன்னிங்ஸைத் தொடங்க யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி களத்தில் இறங்கியுள்ளது.
இந்தியா (பிளேயிங் லெவன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அன்ஷுல் கம்போஜ், பிரசித் சித் கிருஷ்ணா, முகமது கிருஷ்ணா
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்)
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப்(கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித்(கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்கு
இதுவரை, இந்தியாவும் இங்கிலாந்தும் ஓவலில் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, அங்கு இந்தியா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது, ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை, ஓவல் மைதானம் 106 போட்டிகளில் 45 வெற்றிகளுடன் வரலாற்றில் இரண்டாவது வெற்றிகரமான மைதானமாக உள்ளது.