பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை.
கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் 5 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் மர்ம நபர்களால் இன்று காலை 10 மணிக்கு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நிர்மலா தேவி, திண்டுக்கல் இபி காலனி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நிர்மலா தேவியின் தலையை துண்டித்த மர்ம நபர்கள், நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாடிக்கொம்பு போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…