நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் போது கொதிகலண் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி, நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. தமிழகத்தின் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி மூலம், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா,புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 2 ஆவது அலகில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொதிகலண் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு நிரந்தர தொழிலாளி மற்றும் 7 ஒப்பந்த தொழிலாளர்கள் என மொத்தம் 8 தொழிலாளார்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமை அந்த ஒரு நிரந்தர பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் நேற்று கொளிருப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்த தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வேலையின் போது நிகழ்ந்த மரணம் காரணமாக உரிய இழப்பீடு வழங்கக்கோரி 2ம் அனல்மின் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின் உறவினர்களுடன் நெய்வேலி என்.எல்.சி அனல்மின் நிலைய ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்படும் எட்டாத நிலையில் அங்கு மீண்டும் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் உறுதி அளித்தது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்குவதாக உறுதியளித்தது. இந்த என்எல்சி இந்தியா நிர்வாகத்தின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…