விவசாயிகளை மிரட்டி என்.எல்.சி. நிலம் எடுக்கிறது – கைது செய்யப்பட்டுள்ள அன்புமணி குற்றச்சாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆளும் கட்சி நிலத்தை கையகப்படுத்தி என்எல்சிக்கு உடந்தையாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், ஏரளமான பாமகவினர் பங்கேற்றனர். அப்போது, என்எல்சி நிறுவனம் மீதும், தமிழக அரசு மீதும் குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். பாமக முற்றுகை போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, என்எல்சி நிறுவனத்திற்கு நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். தனியார் மண்டபத்தை சுற்று பலத்த போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டுள்ளது. அன்புமணி கைதை அடுத்து, பாமகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, விவசாயிகளை மிரட்டி என்.எல்.சி. நிலம் எடுக்கிறது. அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தினோம், காவல்துறையினர் தான் திடீரென பாமகவினர் மீது தாக்குதல் நடத்தினர். பாமக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், சில நிமிடங்கள் அசம்பாவித நிகழ்ந்தன. பாமக போராட்டம் நடத்தவிட்டால் என்எல்சி ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியிருக்கும்.

என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்எல்சி மின்சாரம் நமக்கு தேவையில்லை. என்எல்சி நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான விளை நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்.எல்.சி. மூலம் தான் மின்சாரம் எடுக்க வேண்டுமா? வேண்டுமென்றால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரிகளை கொள்முதல் செய்யலாம், மின்சாரம் தயாரிக்க மாற்று வகையில் நிறைய உள்ளன.

கற்றாழை, சூரிய ஒளி, கடல் அலை, நீர் உள்ளிட்ட பல வழிகள் உள்ளது. அதனடிப்படையில், மின்சாரத்தை உற்பத்தி செய்யலாமே?, அதுவும் என்எல்சி ஒன்றும் இலவசமாக மின்சாரம் வழங்கவில்லை. விளை நிலத்தை பிடுங்கி, அதை என்எல்சியிடம் ஒப்படைத்து, அந்த நிலத்தை அழித்து பழுப்பு நிலக்கரியை எடுத்து, மாசுப்பற்ற மின்சாரத்தை எடுத்து நமக்கு கொஞ்சம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் மொத்தம் மின் உற்பத்தி 36 ஆயிரம் மெகா வாட், மின் தேவைகள் 18 ஆயிரம் மெகா வாட் தான். உற்பத்தி இரு மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஆனால் அரிசி தயாரிக்கிறது ஒன்று மட்டுமே, அது தான் நிலம். அந்த நிலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் எங்கள் கடவுள் போன்றவர்கள், எனது பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் தான் எனவும் கூறினார். ஆளும் கட்சி நிலத்தை கையகப்படுத்தி என்எல்சிக்கு உடந்தையாக உள்ளது. ஆளும் கட்சியின் அமைச்சர் என்எல்சியின் ஏஜெண்டு போன்று செயல்பட்டு வருகிறார். இங்குள்ள மாவட்ட ஆட்சியர் என்எல்சியிடம் சம்பளம் வாங்குவது போன்று இருக்கிறார் என தமிழக அரசு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் ஆதரவாக ஏராளமான விவசாய சங்கள் உள்ளது. இதனால் தான் யாரும் கேள்வி கேட்க வரவில்லை. இது வெறும் என்எல்சி பிரச்சனை கிடையாது, இது தமிழ்நாட்டின் பிரச்சனை, உரிமை பிரச்சனை, நாளைக்கு சாப்பாடுக்கு வழியில்லாமல் இருக்க போகிறது, சாப்பாடுக்கு பிச்சை எடுக்க போகிறோம் என்றார். குறிப்பாக ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் என நோக்கத்திற்காக என்எல்சிக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என தெரியவில்லை.

இதே திமுக முன்பு என்எல்சியை எதிர்த்தார்கள். இப்போது அமைதியாக உள்ளார்கள்.  செந்தில் பாலாஜி அவர்கள் இரு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது, நாங்கள் மின்சாரத்தை பக்கத்து மாநிலங்களுக்கு விற்று வருகிறோம் என சொன்னதாகவும், அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நில எடுப்புக்கு எதிராக பாமகவை தவிர மற்ற கட்சிகள் ஏன் போராடவில்லை என்பதை அவர்கள் தான் கூற வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

22 minutes ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

29 minutes ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

53 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

1 hour ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

2 hours ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago