பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது – திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான நேர்காணலோ, தேர்வோ நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025