ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இதுவரை தமிழ்நாட்டில் 6 கோடியே 58 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க ஓ.பன்னீர்செல்வம் பொய்க் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
குறிப்பிட்டு புகார் கூறினால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்களுக்கு பயணக்கட்டணம் எங்கும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார். பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. தவறு செய்த ஒரு நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் சாட்ட கூடாது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்
உள்ளூர் அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயண வசதி எனக் கூறிவிட்டு, அதனால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…