எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து ஓ பன்னீர்செல்வம் ட்வீட் .
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார்.
இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர்.
உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த அன்புச்சகோதரர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும் தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட மீண்டு வாருங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…