புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு ஓபிஎஸ் வாழ்த்து.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுகவின் சார்பாக, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.என்.ரவி அவர்கள், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…