தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேரில் 85 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது .நேற்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.