தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது .

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது .

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.  தமிழகத்தில் நேற்று  74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது.

unknown node

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 86 பேருக்கு கொரோனா  நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதித்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.