அரசு போக்குவரத்துக்கு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை.
அரசு போக்குவரத்துக்கு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு எடுத்து வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தை அமல்படுத்த போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை, தொகையை கணக்கிட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…