கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கலைஞரின் படத்தை வைத்து மாலையிட்டு மலர்தூவி வணக்கம் செலுத்தமாறு வேண்டுகிறேன்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற வைர நெஞ்சம் கொண்ட தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்து, பறித்த நாள்.
அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எல்லா நாளிலும் அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கம் இல்லை.
தமிழே மூச்சாக, தமிழர் நலமே வாழ்வாகக் கொண்டு 80 ஆண்டுகளை கடந்து, பொதுவாழ்வு கண்டு, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டை வளம் பெறச் செய்து, இந்திய அரசியல் வானில் ஒளிவீசும் உதய சூரியனாக திகழ்ந்த மகத்தான தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
நாம் மட்டும் அவரை போற்றவில்லை. நாடு போற்றுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துரைத்ததை கண்டோம். இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இனி இருக்கும்.
தமிழ் செம்மொழியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி கலைஞர். தனிச்சிறப்பு வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தில் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர் என்று குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டினார்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தின் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பன்முகத் தன்மையையும், அவர் அவற்றின் சிறப்பியல்புகளையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
பொது மக்களின் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காண கூடியவராக, எத்தகைய கடினமான சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளாக இருந்தபோதும் அதைத் தீர்த்து வைக்க கூடியவராக கலைஞர் வழங்கினார். நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இந்தப் பெரும் அவையில் விவாதங்களில் திறன்பட பங்காற்றியவர் ஆகவும் அவர் விளங்கினார்.
தமிழ் மொழியில் மிகச் சிறந்தவராக விளங்கி அவர் தனது அரசியல் எதிரிகளையும் கவர்ந்தார். மக்களுக்கான முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய வகையில் பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், குடிசைமாற்று திட்டங்கள், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது, சாதி ஒழிப்புக்காக சமத்துவபுரங்கள் உருவாக்கியது என ஏழ்மையில் உள்ளவர்களுக்கான பலவற்றை நிறைவேற்றியவர் கலைஞர்.
கலைஞர் அனைத்து குடியரசு தலைவர்களுடனும் பழகி உள்ளார். அனைத்து பிரதமர்களுடனும் உரையாடியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து முதலமைச்சர்களுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முன்மாதிரியாக ரோல் மாடலாக கலைஞர் இருந்துள்ளார் என எடுத்துரைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பொது வாழ்வும், அவரது சாதனைகளும் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதவை. அதைத்தான் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் எடுத்துரைத்தனர். அத்தகைய மகத்தான சிறப்பு மிக்க நம் தலைவரின் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைப்பதற்கு அவர் மறைந்து மூன்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்திய அரசியல் தலைவர்களின் முன் மாதிரியான ரோல் மாடல் தலைவருக்கு திமுக அரசு அமைந்த பிறகு தான் சட்ட மன்றத்தில் திரு உருவ படம் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. அதனால் தான் அந்த விழாவில் உங்களில் ஒருவர் நான் உரையாற்றும்போதே இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் தமிழன்னையின் தலைமகனான கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்ததை எண்ணி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன். கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் எனக் குறிப்பிட்டேன்.
அந்த விழாவின் சிறப்பு நினைக்கையில் உங்களில் ஒருவனாக கலைஞரின் உடன் பிறப்பாக ஆனந்த கண்ணீரில் நனைகிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நிர்வாகத்தை பயில்கிறேன். உயிர் நிகர் தலைவர் கலைஞர் நம்மிடையே உலாவவில்லை என்றாலும், உள்ளம் எல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதி ஓட்டத்தில் கொள்கை ஓட்டமாக இருக்கிறது.
அவர் காட்டிய பாதை அவர் அளித்த பயிற்சி அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டு தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று கொண்டேன்.
‘சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என தலைவர் கலைஞர் வாக்களித்த நெறியின் படி கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் பேரிடர் காலங்களிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தலையாய கடமையாக கொண்டு செயலாற்றி வருகிறேன்.
உங்கள் துணையுடன் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் தலைவர் கலைஞர் வழியில் கழக அரசின் பயணம் தொடரும் என்பதை அவர் இந்த மூன்றாவது ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதி கூறுகிறேன். உடன்பிறப்பு ஆகிய உங்களின் ஒத்துழைப்பே இந்த பயணத்திற்கு வலுசேர்க்கும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் சேர்க்கும் .
கொரோனா நெறிமுறைகளை கருத்தில் கொண்டு அவற்றை முறையாக கடைபிடித்து ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கலைஞரின் படத்தை வைத்து மாலையிட்டு மலர்தூவி வணக்கம் செலுத்தமாறு வேண்டுகிறேன். பெருவிழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள் ஒலிபெருக்கியை தவிர்த்துவிடுங்கள். நம் நெஞ்சங்களில் நினைவுகளில் நிரந்தரமாக இருந்து நாட்டை வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு வீடுதோறும் மரியாதை செலுத்துவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழ்நாட்டை மாண்புறச் செய்திடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…