Online Rummi hc [Image-moneycontrol]
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில் சட்டம் இயற்றப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
மேலும் உரிய சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும், 32 பேர் தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தற்கொலை செய்துள்ள நிலையில் அவசியம் ஏற்பட்டதன் அடிப்படையில் தான் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது என பதில் மனுவில் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு முன் விசாரிக்கப்பட்ட நிலையில், ரம்மி என்பது திறமைக்கான விளையாட்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை சட்டத்தை நீக்கவும், விசாரணை முடியும் வரை இடைக்கால தடை உத்தரவு வழங்கவும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசு சார்பில் இறுதி வாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் தற்கொலை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்திருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தும் இறுதி விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…