tn 12th students exam [Image source : file image ]
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதனையடுத்து, இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகளில் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் தற்போது வெளியிடபட்டுள்ளது. அதன்படி, தமிழ் தேர்வில் 2 பேர் , ஆங்கிலத்தில் 15 பேர், இயற்பியல் 812 பேர், வேதியியல் 3,909, உயிரியல் 1,494 பேர், கணிதம் 690 பேர், தாவரவியல் 340 பேர், விலங்கியல் 154 பேர், கணினி அறிவியல் 4,618 பேர், வணிகவியல் 5,678 பேர், கணக்குப் பதிவியல் 6,573 பேர்,பொருளியல் 1,760 பேர், கணினிப் பயன்பாடுகள் 4,051 பேர் வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1,334 என மொத்தமாக 32,501 மாணவ, மாணவியர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்ளலாம்..?
மாணவ, மாணவியர்கள் தங்கள் தேர்வு முடிவினை tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம். இணையத்தளத்தில் சென்று மாணவர்கள் அவர்களின் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.
மேலும், இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்றும் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…